கரூரில் இருந்து சென்னைக்கு வீதி விருது விழாவிற்கு நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பயணம்…
கரூரில் இருந்து சென்னைக்கு வீதி விருது விழாவிற்கு நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பயணம்…
ஜனவரி 04 மற்றும் 05 2025 -ல் சென்னையில் மாற்று ஊடக மையம் நடத்தும் 12 ம் ஆண்டு வீதி விருது விழாவிற்கு கரூர் மாவட்டத்தில் இருந்து மாற்று ஊடக மையம் ஒருங்கிணைப்பாளர் ஆர்.சரவணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் புறப்பட்டனர்.கலைஞர்களின் பயணத்திற்காக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி இலவசமாக இரண்டு பேருந்துகளை ஏற்பாடு செய்து கொடுத்தமைக்காக பேருந்து புறப்படும் முன் அமைசருக்கு கலைஞர்கள் சார்பில் நன்றி அறிவிப்பு நிகழ்வு நடத்தப்பட்டது.இந்நிகழ்வில் மாற்று ஊடக மையம் கரூர் மாவட்ட பொறுப்பாளர்கள் வீரா கோபி,முருகேசன்,முனியாண்டி(எ)செல்வம்,குளித்தலை பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்…நிகழ்வின் இறுதியாக களம் அமைப்பின் நிறுவனர் & தலைவர் தி.க.சண்முகம் பயணத்தை துவங்கி வைத்தார்.மேலும் கரூர் மாவட்ட மாற்று ஊடக மையத்திற்கு உறுதுணையாக இருந்த கரூர் பாராளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணிக்கு நன்றி தெரிவித்தனர்… நிகழ்வில் ஏராளமான கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்…
தலைமை செய்தியாளர்
சோஹைல்