இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம்,புல்லந்தை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 76 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. .
இராமநாதபுரம்
மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம்,புல்லந்தை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 76 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில் நாதன் வரவேற்புரை ஆற்றி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராணுவ வீரர் ஜோன்ஸ் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்புரை ஆற்றினார்.சிறப்பு விருந்தினருக்கு பள்ளியின் சார்பில் தலைமை ஆசிரியர் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார். புல்லந்தை ஊர் இளைஞர்கள் பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்…கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.விழா ஏற்பாடுகளை பள்ளி மேலாண்மைக் குழு தலைவி முனீஸ்வரி மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் திவ்யா ஆகியோர் செய்திருந்தனர். பள்ளி ஆசிரியர் பேச்சியம்மாள் நன்றியுரை வழங்க நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.