Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி

சேலத்தில் பண மோசடி கும்பல் கைது…

சேலத்தில் திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில் ₹10க்கு உணவு வழங்கப்பட்ட நிலையில் , தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகரிக்க பணம் முதலீடு செய்தால் 7 மாதங்களில் இரட்டிப்பாக திரும்ப கிடைக்கும் என விளம்பரம்..!

விளம்பரத்தில் வீழ்ந்த பலரும் ₹50,000 முதல் ₹5 லட்சம் வரை பணத்தை போட்டி போட்டுக்கொண்டு முதலீடு செய்துள்ளனர். நேற்று, ₹1 லட்சம் முதலீடு செய்தால் இரண்டு நாட்களில் ₹2 லட்சம் கிடைக்கும் என இக்கும்பல் விளம்பரம் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதியது..

இதனால்,போலீசார் அங்கு வந்து விசாரிக்க அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மாநகர போலீசார் குவிக்கப்பட்டு, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உள்ளே சென்று விசாரணை நடத்தியதில் எந்த ரசீதும் கொடுக்காமல் ₹100 கோடி வரை வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது..

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அறக்கட்டளையை நடத்தும் விஜயா பானு மீது ஏற்கனவே பல மோசடி வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மூவரை கைது செய்த போலீசார் பணம், தங்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button