கும்பகோணம் இருப்புப் பாதை காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரிகளும், காவலர்களும் இணைந்து குடியரசு நாள் விழா கொண்டாட்டம்…!
கும்பகோணம் :
நாடெங்கும் குடியரசு நாள் விழா (26.01.25) நடைபெற்ற நிலையில் கும்பகோணம் இருப்புப் பாதை காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரிகளும், காவலர்களும் இணைந்து குடியரசு நாள் விழாவைப் பலரும் பாராட்டத்தக்க வகையில் மிகச் சிறப்பாகக் கொண்டாடினர்.
இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய தேசிய விருதாளர் முனைவர் மு.செல்வசேகரனுக்கு இருப்புப் பாதை காவல்துறை ஆய்வாளர்கள் செந்தில்வேலன் மற்றும் தனலட்சுமி ஆகியோர் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தனர்.செல்வ சேகரன் பேசுகையில் தேசப் பாதுகாப்பில் இராணுவத்தினரின் பங்கும், காவல்துறையினரின் பங்கும் மிக முக்கியமாக இருப்பதால் இவர்களை மதித்துக் கொண்டாடுவது அனைவரின் கடமை என்றார்
மேலும், தேசத்தைக் காத்தல் செய்” என்ற பாரதியின் கட்டளையைத் தலைமேற்கொண்டு சேவை மனப்பான்மையுடன் மிகச் சிறப்பாகப் பணியாற்றும் காவலர்களுக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
தலைமை செய்தியாளர்
JDPN