திருப்பத்தூர் மாவட்டம் கடந்த 2019 உருவாக்கப்பட்டது.தற்காலிக ஆட்சியர் அலுவலகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டது…மீனாட்சி பேருந்து நிறுத்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே அமைந்துள்ளது..பேருந்து நிலையம் பல காலமாக செயல்பாட்டில் இருந்து வந்த நிலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் மாவட்ட ஆட்சியரகம் வருகையை ஒட்டி இப்பகுதியில் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்ற காரணங்களை கூறி பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டது… இதனால் பொதுமக்கள்,பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்…பேருந்து நிறுத்தம் குறித்து சமூக ஆர்வலர் ராஜீவ் காந்தியிடம் கோரிக்கை வைக்கப்பட்டதன் பேரில் முதன் முதலில் 23.01.2023 அன்று மீனாட்சி பேருந்து நிறுத்தம் வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களை கூறி பேருந்து நிறுத்தம் செயல்படுத்துவதை தாமதிக்கப்பட்டது.இதற்கிடையில் உள்ளூர் சமூக அலுவலர்கள் தொழிலதிபர்கள் என பலதரப்பு மக்களின் வேண்டுகோள் மற்றும் தொடர் மனு போராட்டத்தின் காரணமாக 30.11.2024 அன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ததன் பெயரில் 02.01.2025 முதல் மீனாட்சி பேருந்து நிறுத்த சேவை மீண்டும் செயல்பாட்டிற்கு வந்ததை ஒட்டி சட்ட பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி,சமூக ஆர்வலர்கள்,அருள், வெள்ளிக்கண்ணன்,மணிமேகலை,காமாட்சி,மாலதி, பிரபாவதி, வெங்கடேசன், மோகன்,நவீன், கௌதம் ஆகியோர் பயணிகளோடு மகிழ்ச்சியை கொண்டாடினார்…
திருப்பத்தூர் மாவட்டம் கடந்த 2019 உருவாக்கப்பட்டது.தற்காலிக ஆட்சியர் அலுவலகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டது…மீனாட்சி பேருந்து நிறுத்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே அமைந்துள்ளது..பேருந்து நிலையம் பல காலமாக செயல்பாட்டில் இருந்து வந்த நிலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் மாவட்ட ஆட்சியரகம் வருகையை ஒட்டி இப்பகுதியில் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசல்
போன்ற காரணங்களை கூறி பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டது… இதனால் பொதுமக்கள்,பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்…பேருந்து நிறுத்தம் குறித்து சமூக ஆர்வலர்
ராஜீவ் காந்தியிடம் கோரிக்கை வைக்கப்பட்டதன் பேரில் முதன் முதலில்
23.01.2023 அன்று மீனாட்சி பேருந்து நிறுத்தம் வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களை கூறி பேருந்து நிறுத்தம் செயல்படுத்துவதை தாமதிக்கப்பட்டது.இதற்கிடையில் உள்ளூர் சமூக அலுவலர்கள் தொழிலதிபர்கள் என பலதரப்பு மக்களின் வேண்டுகோள் மற்றும் தொடர் மனு போராட்டத்தின் காரணமாக
30.11.2024 அன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ததன் பெயரில் 02.01.2025 முதல் மீனாட்சி பேருந்து நிறுத்த சேவை மீண்டும் செயல்பாட்டிற்கு வந்ததை ஒட்டி
சட்ட பஞ்சாயத்து இயக்கத்தை
சேர்ந்த
ராஜீவ் காந்தி,சமூக ஆர்வலர்கள்,அருள், வெள்ளிக்கண்ணன்,மணிமேகலை,காமாட்சி,மாலதி,
பிரபாவதி, வெங்கடேசன், மோகன்,நவீன், கௌதம் ஆகியோர் பயணிகளோடு மகிழ்ச்சியை கொண்டாடினார்…