திருப்பத்தூர் மாவட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது….
திருப்பத்தூர் மாவட்டம்
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது….
திருப்பத்தூரில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் (1856 – 2025) 169 ஆண்டு காலமாக கல்வி பணியை செம்மையாக செய்து வருவதை கொண்டாடும் வகையில் பள்ளியின் நூறாண்டு விழா,முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் விழா,பள்ளியின் புதிய ஆண்டு துவக்க விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது…நிகழ்ச்சியில் நல்லதம்பி எம்.எல்.ஏ.,திமுக நகர செயலாளர் ராஜேந்திரன்,நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன்,மாவட்ட முதன்மை கல்வி புண்ணியகோடி,மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்…நிகழ்ச்சியில் ஆசிரியர் அப்துல் காதர் சிறப்புரையாற்றினார்… நிகழ்ச்சியை பள்ளியின் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமையேற்று நடத்தினார்..விழாவில் பள்ளியின் முன்னாள்,இந்நாள் மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்…..
தலைமை செய்தியாளர்
S. ராஜீவ் காந்தி