கும்பகோணம் தவத்திரு திருவடிக்குடி சுவாமிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்…
கும்பகோணம் தவத்திரு திருவடிக்குடி சுவாமிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.அதில் கும்பகோணம் மாநகருக்கு அருகில் உள்ள
சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமியை தரிசிக்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தரும் பக்தர்கள், வாகனங்கள் வந்து செல்வதிலும் பொது போக்குவரத்திற்கும் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு சாலை மற்றும் வீதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும்.
கடை, வியாபாரம் தேவை தான். ஆனாலும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் அதனை கட்டமைக்க வேண்டும்.
பழனியில் இரண்டு நாட்கள் முத்தமிழ் முருகன் மாநாடு நடத்துவது போல, விரைவில் சுவாமிமலையிலும் “ஞானத்தமிழ் முருகன் மாநாடு” என்று ஆறு நாட்களுக்கு நடத்த வேண்டும். எனவும் சுவாமி மலையில் நடைபெற்ற, ஆவணி மாத கிரிவலம் வழிபாட்டில் குடந்தை தவத்திரு திருவடி குடில் சுவாமிகள் கேட்டுக் கொண்டுள்ளார்….