குமரி மாவட்டம் சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதி அறங்காவலர் பாலபிரஜாதிபதி அடிகளாரின் துணைவியார் ரமணிபாய் மறைந்த செய்தியறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்….
குமரி மாவட்டம்
சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதி அறங்காவலர் பாலபிரஜாதிபதி அடிகளாரின் துணைவியார் ரமணிபாய் மறைந்த செய்தியறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் அமைச்சர் தங்கம் தென்னரசு,முன்னாள் அமைச்சர் குமரி மேற்கு மாவட்ட செயலாளர் மனோதங்கராஜ்,குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் ஆகியோர் சுவாமிதோப்பிலுள்ள அன்னாரது இல்லம் சென்று திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்..தமிழக முதல்வர் சார்பாக ஆழ்ந்த இரங்கலை அமைச்சர் அறிவித்தார்..உடன் முன்னாள் அமைச்சர் என் சுரேஷ் ராஜன், முன்னாள் எம்.பி ஹெலன் டேவிட்சன், மாவட்டத் துணைச் செயலாளர் பூதலிங்கம், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு மற்றும் மாநில,மாவட்ட,ஒன்றிய,மாநகர,நகர,பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்….