உள்ளூர் செய்திகள்
திருப்பத்தூர் மாவட்டம் ஜலகாம்பாறை போகும் வழியில் சிவராஜ்பேட்டை பகுதியில் கழிவுகள் அகற்ற கோரிக்கை…
திருப்பத்தூர் மாவட்டம் ஜலகாம்பாறை போகும் வழியில் சிவராஜ்பேட்டை பகுதியில் கோழி கழிவுகள் மற்றும் ஏராளமான குப்பை கழிவுகள் ஏரியில் உள்ள நீரிலும்,சாலை ஓரத்தில் கொட்டபடுவதால், துர்நாற்றம் வீசுவதாலும், நோய் தொற்றும் அவல நிலை ஏற்பட்டுள்ளது, இவ்வழியாக ஏராளமான பள்ளி குழந்தைகளும்,கல்லூரி மாணவ மாணவிகளும், வேலைக்கு செல்பவர்களும், மேலும் விடுமுறை நாட்களில் சுற்றுலா தலமாக விளங்கும் ஜலகாம்பாறை அருவிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.. ஆகவே பொதுமக்களின் நலன் கருதி நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…