அரசியல்உலகம்நாடுமுக்கிய செய்தி
புரூனே மன்னருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை…!
புரூனே மன்னருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை...!
இந்தியா – புரூனே இடையே தூதரக உறவு ஏற்பட்டு 40வது ஆண்டு தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று புரூனே நாட்டிற்கு சென்றார்.
புரூனே தலைநகர் பந்தர் செரி பெகவானுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்ததில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மோடி தான் தங்கும் ஓட்டலுக்கு சென்றார்.
அப்போது அங்கு காத்திருந்த இந்திய வம்சாவளியினர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.