அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,தா.பழூர் ஒன்றியத்தில் நான்கு வழிச்சாலை பணி ஆய்வு,உயர்மட்ட பாலம் அமைக்க ஆலோசனை.
தா.பழூர் ஒன்றியத்தில் நான்கு வழிச்சாலை பணி ஆய்வு,உயர்மட்ட பாலம் அமைக்க ஆலோசனை.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,தா.பழூர் ஒன்றிய பகுதியில்
விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை செல்லும் சாலையில் நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருவதில்,
கண்டியன்கொல்லை கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் சாலை அமைக்கவும், தென்னவநல்லூரில் சுற்றுவட்ட சாலை அல்லது உயர்மட்ட பாலம் அமைக்கவும்,
மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன்,
நீர்வளத்துறை கும்பகோணம் கோட்ட உதவி செயற்பொறியாளர் யோகீஸ்வரன்,
NHAI உதவி பொறியாளர் ஸ்ரீநிதி, பட்டேல் கம்பெனி திட்ட மேலாளர் சிங்காரவேலன் ஆகியோர் ஆலோசனை செய்தனர்.நிகழ்வில் நீர்வளத்துறை உதவி பொறியாளர் பூங்கொடி,திருப்பனந்தாள் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் மிசா மனோகரன், திருப்பனந்தாள் மத்திய ஒன்றிய கழக செயலாளர் உதயச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள்,கழகத் தோழர்கள்,
பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்….