புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் அரியநாயகி அம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு சிசிடிவியில் பரபரப்பு…!அறந்தாங்கி காவல்துறையினர் விசாரணை…!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் அரியநாயகி அம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு சிசிடிவியில் பரபரப்பு…!அறந்தாங்கி காவல்துறையினர் விசாரணை…!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த கூத்தாடிவயல் கிராமத்தில் அரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த அம்மன் கோவிலில் நேற்று ( 10.04.25 ) நள்ளிரவு 1 மணியளவில் இளைஞர் ஒருவர் தலையில் துண்டு கட்டிக்கொண்டு கையில் அரிவாளோடு கோவிலின் கதவை உடைத்து கோவிலுக்கு உள்ளே உள்ள உண்டியல் பணத்தை திருடி சென்றுள்ளார். காலையில் அப்பகுதி பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும்பொழுது அரிவாளோடு பூட்டை ஒருவர் உடைப்பதும், இரண்டு நபர்கள் கண்காணிப்பது போன்ற சிசிடிவி காட்சிகள் பதிவாகி உள்ளது. உடனே அறந்தாங்கி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அரிவாளோடு பூட்டை உடைத்த திருடன் மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்ட மேலும் இரண்டு திருடர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
செய்தியாளர்
ராஜா முஹம்மது