திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு போதைப் பொருட்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பற்றியும்,போக்குவரத்து விதிமுறைகள் பற்றியும்,இணையவழி மோசடி பற்றியும்,காவல் உதவி செயலி பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
அதைத்தொடர்ந்து இன்று (19.11.2024) வாணியம்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், நாட்றம்பள்ளி காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்க்கரசி தலைமையில் வாணியம்பாடி பிருந்தாவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்…