திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர் காவல் துறையினரால் பொதுமக்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது..!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர் காவல் துறையினரால் பொதுமக்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது..!
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் ஆம்பூர் நகர எல்லைக்குட்பட்ட பேருந்து நிலைய பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளான தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை ஆம்பூர் கிராமிய காவல் ஆய்வாளர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது இருசக்கர வாகனம் ஓட்டும்போது அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும், தலை கவசம் அணிவதால் சாலை விபத்திலிருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்து கொள்ளமுடியும். தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்,அதிவேக பயணம் செய்யக்கூடாது,மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டக்கூடாது,கார் ஓட்டும்போது சீட்பெல்ட் அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது…..