சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் அதாயி கல்வி குழுமம் நடத்திய மிலாதுன் நபி சமய நல்லிணக்க விழாவில் கும்பகோணம் ஜோதிமலை கூட்டம் நிறுவனர் தவத்திரு திருவடிகுடில் சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்…
சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் அதாயி கல்வி குழுமம் நடத்திய மிலாதுன் நபி சமய நல்லிணக்க விழாவில் கும்பகோணம் ஜோதிமலை கூட்டம் நிறுவனர் தவத்திரு திருவடிகுடில் சுவாமிகள் கலந்து கொண்டு பேசியதாவது.
அக்டோபர் 2ஆம் தேதி மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டை தொல்.திருமாவளவன் நடத்த இருப்பது வரவேற்கத்தக்கது..தமிழக முதல்வரும்
விடுதலைச் சிறுத்தைகளின் கோரிக்கையை ஏற்று, திமுக பிரதிநிதிகளை மாநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக சொல்லி இருக்கிறார்.
பிரதிநிதிகளை அனுப்பி வைப்பதும் விரைவில் பூரண மதுவிலக்கை நடைமுறைப் படுத்துகிறோம் என்று சொல்வதோ இனி வேலைக்கு ஆகாது.
பூரண மதுவிலக்கும் போதைப் பொருளுக்கு எதிரான தீவிர நடவடிக்கையும் உடனடி தேவை.
17ஆம் தேதி மிலாடி நபி அன்று பூரண மதுவிலக்கை அறிவித்துவிட்டு மது ஒழிப்பு மாநாட்டில் தேசத்தில் தமிழ்நாடு
முன்மாதிரியாக நடந்து கொண்டு, பிறகு மாநாட்டில் கலந்து கொள்வதே சரியாக இருக்கும். தொடர்ந்து தேசியம் தழுவிய அளவில் பூரண மதுவிலக்கு கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும்.
தமிழகத்தில் மதுவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் தாய்மார்கள் அழுது கண்ணீர் வடிக்கிறார்கள்.
அது பெண்களின் அழுகை நீர் அல்ல; இந்த சாராயச் சமூகத்தின் மீது ஏற்பட்டுள்ள வெறுப்பால்
கண்கள் காரித்துப்பிய கண்ணீர்.
மீலாது விழா மேடையில் இருந்து சொல்லுகிறேன்! தமிழ்நாட்டில் உடனடியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்தவில்லை என்றால் இனி தமிழ்நாடு மீளாது…! என்று பேசினார்….