133 அடி உயர பொங்கல் பானை வரைந்து உலக சாதனை செய்த மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்…
மதுரை::
பொங்கல் விழா கொண்டாட்டத்தில் 133 அடி உயர பொங்கல் பானை வரைந்து உலக சாதனை செய்த மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்,இந்த ஆண்டு தமிழர் திருநாளாகிய பொங்கல் பண்டிகை மற்றும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது, இதில் திருக்குறளில் உள்ள 133-அதிகாரங்களின் 5 எண்ணிக்கைக்கு ஏற்ப 133-அடி உயரத்தில், 70 அடி அகலத்தில் 133-மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து 1330-திருக்குறளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 1330-வினாடிகளில் மண் தரையில் அடுப்புடன் கூடிய பொங்கல் பானையினை, பல்வேறு வண்ணங்களில் பிரமாண்டமான கோலமாக வரைந்து உலக சாதனையை செய்துள்ளனர் , பள்ளியின் தலைமை ஆசிரியர் தண்ணாயிரமூர்த்தி, ஆசிரியர்கள் சரவணன் மாடக்குளம் விஜயகுமார் உள்ளிட்ட ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்போடு நடத்தப்பட்ட இந்த உலக சாதனை நிகழ்வினை சோழன் உலக சாதனை புத்தகம் நிறுவனத்தின் நிறுவனர் நீலமேகம்நிமலன்,ஒருங்கிணைப்பாளர் பெருமாள் செல்லதுரை,பன்னாட்டு பொதுச்செயலாளர் ஆர்திகா உள்ளிட்டோர் முன்னிலையில் இந்நிகழ்வு உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது, மேலும் சாதனைக்கான பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் பள்ளிக்கு வழங்கப்பட்டது, ஆண்டுதோறும் கொண்டாடும் பொங்கல் விழாவினை உலக சாதனை விழாவாக நடத்திக் காட்டிய இப்பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.