திருப்பத்தூரில் 175 ஆண்டு பழமையான பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..
175 ஆண்டு பழமையானஅரசு மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது….!
படிக்காத மேதை, கல்விக்கண் திறந்த காமராசர், அரசியல் கிங் மேக்கர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட காமராசரின் 122-வது பிறந்தநாள் விழா திருப்பத்தூர் மாவட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது…பள்ளியின் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஆசிரியர் கோபி அனைவரையும் வரவேற்றார். நம் மக்களின் குரல் ராதாகிருட்டிணன் வாழ்த்துரை வழங்கினார். கெஜல் நாயக்கம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் கணினி ஆசிரியர் ரவி “காமராஜரின் வாழ்வும் தொண்டும்” என்ற தலைப்பில் மாணவர்கள் இடையே சிறப்புரையாற்றினார்.
காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு *பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி* என்று பல்வேறு போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
ஆசிரியர் பாஸ்கரன் நன்றியுரை கூறினார். காமராசரின் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது… உடன்
“நம் மக்களின் குரல்” பொம்மிகுப்பம்
ராதாகிருட்டிணன்
சமூக ஊடக மையம் மாவட்ட அமைப்பாளர் திருப்பத்தூர் மாவட்டம்….