கன்னியாகுமரி நகராட்சியாக தகுதி உயர்வு : முதல்வருக்கு முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ்ராஜன் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்….
கன்னியாகுமரி நகராட்சியாக தகுதி உயர்வு :
முதல்வருக்கு
முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ்ராஜன் நன்றி தெரிவித்து
அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த 04.09.2021 அன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளரிடமும் 07.09.2021 அன்று தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேருவிடம் சென்னையில் நேரில் சந்தித்தும், கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருந்தேன்.
தற்போது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
உள்ளபடியே அந்த அறிவிப்பு இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்காக நான் முன்னேடுக்கும் என்னுடைய மற்றுமொரு முயற்சிக்கான வெற்றியாகவே கருதுகிறேன்.
திராவிட ஆட்சியில் மக்களின் நலனுக்காக வைக்கப்படும் கோரிக்கைகள் நிச்சயம் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நிறைவேற்றி தரும் என்பதற்கு இது மற்றுமொரு சாட்சி.
இந்த நேரத்தில் கன்னியாகுமரி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி தந்த, திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவை வரலாற்று சிறப்புமிக்க விழாவாக மாற்றி தந்த முதலமைச்சருக்கு நன்றிகளையும் வணக்கங்களையும் உரித்தாக்குகிறேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும் கன்னியாகுமரி நகராட்சியுடன் கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் தெற்கு தாமரைகுளம் ஆகிய பேரூராட்சிகளையும் கோவளம், பஞ்சலிங்கபுரம்,லீபுரம் மகாராஜபுரம் ஆகிய ஊராட்சிகளையும் இணைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்…