கன்னியாகுமரி கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழைப்பாலம் பொதுமக்களை அனுமதிப்பதற்கு தயார் நிலையில் உள்ளது…
கன்னியாகுமரியில் விவேகானந்தர் மற்றும் திருவள்ளுவர் நினைவு மண்டபங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்ப்பதற்காக ஆன்லைன் உள்ளிட்ட பல்வேறு வழிகளை குறித்து ஆராய்ந்து வருவதாக குமரி மாவட்ட கலெக்டர் ஆர்.அழகுமீனா கூறினார். செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது, கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக 53 லட்ச ரூபாய் செலவில் பேட்டரி கார் பயணம் துவங்கப் பட்டு உள்ளது. இதற்காக தனி பாதை அடையாளம் செய்யப்படும். அய்யன் திருவள்ளுவர் பூங்கா மிக சிறப்பாக புதுப்பிக்கப்பட்டு நவீன படுத்தப் பட்டுள்ளது.பொது மக்கள் இதனை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்,சிறந்த முறையில் இந்த பூங்காவை பராமரிக்க பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஆணை பிறப்பித்து உள்ளேன்..கன்னியாகுமரி கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழைப்பாலம் பொதுமக்களை அனுமதிப்பதற்கு தயார் நிலையில் தான் உள்ளது.இன்னும் அரசிடம் இருந்து உரிய ஆணை வந்ததும் அது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என கூறினார்…