நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஒழுகினசேரியில் நடைபெறும் பணிகளை மேயர் ரே.மகேஷ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்…
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஒழுகினசேரியில் அவ்வை சண்முகம் சாலை முதல் மணியாடிச்சான் கோவில் வரை,மீனாட்சி கார்டன் ஆகிய பகுதிகளில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா உடன் சேர்ந்து இடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை பகுதி,பூங்கா சுத்தம் செய்தல்,பூங்கா அருகில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தம் அமைக்கவும்,தனியார் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றவும்,மழைநீர் ஓடைகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும் தகுந்த நடவடிக்கை எடுத்திட மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். புதிய பூங்கா அமைப்பதற்கான இடத்தை ஆய்வு மேற்கொண்டார்.உடன் மண்டலத்தலைவர் .
ஜவஹர்,உதவிசெயற்பொறியாளர் ரகுராம்,சுகாதார அலுவலர் முருகன்,.ராஜாராம்,இளநிலை பொறியாளர்கள் செல்வின்ஜார்ஜ்,.பாஸ்கர்,மாமன்றஉறுப்பினர்கள் கலாராணி,.அக்ஷயா கண்ணன்,மாநகர துணை செயலாளர் வேல்முருகன் வட்ட செயலாளர் ஜீவா மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.