ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சுமார்
750 மாணவர்கள் 6 ம் வகுப்பிலிருந்து 12 ம் வகுப்பு வரை பயின்று வரும் நிலையில் பள்ளியின் எதிரில் இருக்கும் பிரதான சாலையில் இரண்டு வேகத்தடை ஏற்கனவே அமைக்கப்பட்டு பல வருடங்களாக வேகத்தடை பயன்பாட்டில் உள்ளது..பூட்டுத்தாக்கு ஒட்டிய கன்னிகாபுரத்தில் சி.எம்.சி மருத்துவமனை இயங்கி வருவதன் காரணமாக வெளி மாநில வாகனங்கள் திருவலம் அம்முண்டி வழியாக பூட்டுத்தாக்கு அரசினர் மேல்நிலைப்பள்ளி வழியாக எந்நேரமும் சென்று கொண்டிருக்கிறது… இதன் காரணமாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது..? பள்ளியின் எதிரில் அமைக்கப்பட்டுள்ள இந்த இரண்டு வேகத்தடைகள் காலப்போக்கில் உயரம் குறைந்து வேகத்தடை இருப்பதற்கான அடையாளம் இல்லாமல் இருக்கிறது…பலமுறை தேசிய நெடுஞ்சாலை துறைக்கு புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர்…