அரசியல்உள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிறைச்சாலை அருகில் ஏற்பட்ட பள்ளம்…
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சாலை கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டது.
பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி முடிவடைந்தும் அப்பணி நடைபெற்ற இடத்தில் மட்டும் தார் போட்டு சாலை சீரமைக்கப்பட்டது.
இப்பணியின் காரணமாக மூன்று முறை பள்ளம் ஏற்பட்டு விபத்துகளும் நடைபெற்றது. தற்போது நான்காவது முறையாக சிறைச்சாலைக்கு முன்பு உள்ள சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது…
பலமுறை பராமரிப்பு பணி நடைபெற்றும் தரமான சாலை அமைக்காத ஒப்பந்ததாரர் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி. எழுப்பியுள்ளனர்.