திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் புதிய மாணவர் விடுதியினை காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதல்வர் திறந்து வைத்தார்…
திருப்பூர் மாவட்டம்
தாராபுரத்தில் புதிய மாணவர் விடுதியினை காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதல்வர் திறந்து வைத்தார்…
தாராபுரத்தில் ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அரசு மாணவர் விடுதி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு. அதற்கான திறப்பு விழா இன்று 14.04.25 நடைபெற்றது… கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.விழா 1-வது வார்டு கவுன்சிலர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது… தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் முன்னிலை வகித்து குத்துவிளக்கு ஏற்றினார்.நிகழ்ச்சியில் கூடுதல் அரசு வழக்கறிஞர் உதயச்சந்திரன் ,1-வது வார்டு கிளைச் செயலாளர் நாச்சிமுத்து, பிரதிநிதிகள் பொன்னுசாமி, ஆறுசாமி, ராஜாமணி மகளிர் அணி சந்திரா, சதாம் உஷேன்,விடுதி காப்பாளர் ராமகிருஷ்ணன்,பணியாளர் துரைசாமி,சமையலர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்…
செய்தியாளர்
அன்பழகன்.