திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி ஊராட்சியில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது…
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி ஊராட்சியில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது…
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன் தலைமையில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு புதிய சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள்,மண் வெட்டி, கடப்பாரை, கூடை, கையுரை மற்றும் பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பயனாளிக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டது.
முன்னதாக தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து பேசிய ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன், கந்திலி ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மேலும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பியின் நிதி உதவியுடன் சாலை அமைத்தல், மேல் நீர் தேக்க தொட்டி, பழுதடைந்த வீடுகளை சீரமைத்தல் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என குறிப்பிட்டு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் MGNRGS ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன், ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆனந்தன், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி எழுத்தர் ராஜேஸ்குமார், தூய்மை பணியாளர்கள், ஆப்ரேட்டர்கள் ஜடையன், ரகு, சுப்பிரமணி மற்றும் பலரும் கலந்துகொண்டனர்….
தலைமை செய்தியாளர்
S. ராஜீவ்காந்தி