கும்பகோணம் தொகுதி ,மேற்கு ஒன்றியம், மருதாநல்லூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை (100 நாள் வேலை) வழங்காமல் வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மருதநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டிட வாசலில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது…

ஆர்பாட்டத்தில் தமிழகத்துக்கு தரவேண்டிய ரூ.4034 கோடி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட (MGNREGA) நிதியை வழங்காமலும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்… ஆர்ப்பாட்டத்தில் மத்திய ஒன்றிய செயலாளர் கணேசன், மேற்கு ஒன்றிய செயலாளர் S.K.முத்துச்செல்வம் , மாநகராட்சி துணை மேயர் ,மாநகர செயலாளர் சுப.தமிழழகன், செயற்குழு உறுப்பினர் குட்டி தெட்சிணாமூர்த்தி, தஞ்சை வடக்கு மாவட்ட மகளிர் திமுக துணை அமைப்பாளர் வலைத்தள பொறுப்பாளர் சுடர்விழி பழனிவேல், மற்றும் மகளிர் அணியினர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
கி.இரவி,
தில்லையம்பூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டி.என்.கரிகாலன், ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் 100 நாள் வேலை செய்யும் பெண்கள் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்….
தலைமை செய்தியாளர்
JDPN