திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது…
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது…
கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினரிடம் கருத்து கேட்கப்பட்டது.. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் திருப்பத்தூர் நகர் மூன்றாவது வார்டு பகுதியை பிரிப்பது அல்லது வாக்குச்சாவடி மையம் மாற்றி அமைப்பது,
தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பே பூத் ஸ்லிப் விநியோகம் செய்வது உள்ளிட்ட கோரிக்கையை முன்வைக்கப்பட்டது… அதிமுக சார்பில் இரட்டை வாக்காளர் குளறுபடி திருத்தம் சரி செய்வது, வாக்குச்சாவடி அருகே தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும்.. திமுக சார்பில் திருப்பத்தூர் நகர் மூன்றாவது வார்டு பகுதியை பிரிப்பது மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் அதனை நீக்கம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது… அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் வரதராஜன் அனைத்து கோரிக்கைகளையும் மாநில தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி இறுதி முடிவு எடுக்கப்படும் என அறிவித்தார்…
தலைமை செய்தியாளர்
S. ராஜீவ்காந்தி