கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் இன்று 25.03.2025-ம் தேதி மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது…
கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் இன்று 25.03.2025-ம் தேதி மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது…
இக்கூட்டத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் கலந்தாய்வு கூட்டத்தில் கொலை வழக்குகள், வழிப்பறி குற்றவாளிகள், இரவு மற்றும் பகல் கன்ன களவு குற்றவாளிகள், போக்கிரிகள் மற்றும் திட்டமிட்டு செயல்படும் குற்றவாளிகள் ஆகியோரை தொடர்ந்து கண்காணித்து முறையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்…தொடர்ந்து கரூர் மாவட்ட காவல்துறையில் குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ் கான் அப்துல்லா பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்…
தலைமை செய்தியாளர்
சோஹேல்