திருப்பத்தூர் மாவட்டத்தில் பணம் கேட்டு தொந்தரவு வாலிபர் தற்கொலை..!மோசடி பெண்ணை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகை…!
திருப்பத்தூர் மாவட்டத்தில் பணம் கேட்டு தொந்தரவு வாலிபர் தற்கொலை..!மோசடி பெண்ணை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகை…!
திருப்பத்தூர் மாவட்டம் கௌதமபேட்டை பகுதியை சேர்ந்த முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் கௌரவன் மகன் சுரேஷ் (32) தனியார் கொரியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
மடவாளம் அடுத்த காளத்தீயூர் பகுதியை சேர்ந்த முனிசாமி மகள் சங்கீதா (30) திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சுரேஷிடம் பழகி வந்துள்ளார், இதனையெடுத்து ஆசை வார்த்தை பேசி நகை மற்றும் லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தினமும் பணம் கேட்டு சுரேஷை தொந்தரவு செய்துள்ளார்… ஒன்று பணம் கொடு அல்லது என் வழியில் விடு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன், நீ ஒதுங்கி போ, அல்லது செத்து விடு என கூறி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ் கடந்த 05.02.25 அன்று தினம் சித்திரவதை படுவதை தாள முடியாமல் ஓரே அடியாக தற்கொலை செய்து கொள்கிறேன் எனவும்,தன்னுடைய மரணத்திற்கு காரணம் சங்கீதா தான் எனவே அவரை விட்டு விடாதீர்கள் என கூறி தற்கொலை செய்வதற்கு முன்பு தூக்கு கயிறுடன் வீடியோ எடுத்து பதிவு செய்து பின்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து சுரேஷின் உறவினர்கள் அனைத்து ஆதாரங்களையும் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் அளித்து அந்த பெண்ணை கைது செய்ய கோரி புகார் அளித்துள்ளனர்.
ஆனால் இதுவரை காவல்துறையினர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால் சுரேஷின் உறவினர்கள் 100 க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தலைமை செய்தியாளர்
S. ராஜீவ்காந்தி