கவிஞர் வேம்புமணி எழுதி சோலைப் பதிப்பகம் வெளியிட்ட ‘மின்னும் வண்ணப்பூக்கள் 100’ நூல் வெளியீட்டு விழா!
கவிஞர் வேம்புமணி எழுதி சோலைப் பதிப்பகம் வெளியிட்ட ‘மின்னும் வண்ணப்பூக்கள் 100’ நூல் வெளியீட்டு விழா!
‘இலக்கியச்சோலை’ திங்களிதழ் மற்றும் சோலைப் பதிப்பகம் சார்பில் கவிஞர் வேம்புமணி எழுதிய ‘மின்னும் வண்ணப்பூக்கள் 100’ கவிதை நூல் வெளியீட்டு விழா 14-07-2024 ஞாயிறன்று சென்னை பெரம்பூரில் நடைபெற்றது. நற்றமிழ்க்கவிஞர் ந.பாபு தலைமையேற்க கவிஞர் ஞால.இரவிச்சந்திரன் நூலினை வெளியிட்டார்.முதற்பிரதியினை த.வடிவேலு பெற்றுக்கொண்டார்…சொர்ணபாரதி தொகுப்புரை நிகழ்த்த கவிக்கோ துரை.வசந்தராசன்,முனைவர் கஸ்தூரி ராசா,இராமலட்சுமி முருகன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
நூலாசிரியரின் உறவினர்கள்,நண்பர்கள் மற்றும் இலக்கியத் தோழர்கள் பலர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் நூலாசிரியர் வேம்புமணிக்கு சோலைப் பதிப்பகம் சார்பில் ‘வேல்வரிக் கவிஞர்’ என்னும் விருது வழங்கப்பட்டது… பதிப்பாசிரியர் சோலை தமிழினியன் அறிமுகவுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது…..