திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பத்து ரூபாய் இயக்க பொறுப்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்…
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பத்து ரூபாய் இயக்க பொறுப்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்…
1. திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் CCTV Camera & சேமிக்கும் திறனை அதிகப்படுத்த வேண்டும் எனவும். 2. பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு ஒப்புகைசீட்டு மற்றும் அதன் மனுவினை GO NO 99-ன் படி 30 நாட்களுக்குள் மனுதாரருக்கு கடிதம் மூலம் அனுப்ப வேண்டும் எனவும்
3. திம்மாம்பேட்டை அரசு துவக்கப்பள்ளி கூடுதல் கட்டிட சுற்றுச்சுவர் வேண்டுமெனவும் 4. காரப்பட்டு கிராமத்தில் அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்தும் செயல்பாட்டிற்கு வராமல் உள்ளதால் உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமெனவும் 4. அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ள தனி நபர்களிடம் இருந்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் எனவும். 5. மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்…மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்…
செய்தியாளர்
கோபி