உள்ளூர் செய்திகள்குற்றம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள், போக்குவரத்து விதிமுறைகள், இணையவழி மோசடி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…

திருப்பத்தூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள், போக்குவரத்து விதிமுறைகள், இணையவழி மோசடி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…!

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதை பொருட்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பற்றியும், போக்குவரத்து விதிமுறைகள் பற்றியும், இணையவழி மோசடி பற்றியும்,காவல் உதவி செயலி பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

அதன்படி இன்று (25.10.2024) சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு (SJHR) உதவி ஆய்வாளர் ராணி மற்றும் சமூக நல அலுவலர் கலையரசி தலைமையில் ஜோலார்பேட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் இரா.பூங்கோதை, பேராசிரியர்கள், 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button