Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கமாண்டோ பயிற்சிப் பள்ளியில் 20.01.2025 முதல் 15.03.2025 வரை நடைபெற்ற 8 வார கால கமாண்டோ பயிற்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை காவலர் 884 A.ஹரிகிருஷ்ணன் கலந்து கொண்டு கீழ்காணும் பிரிவுகளில் பங்கேற்று பதக்கங்கள் பெற்றார்…
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கமாண்டோ பயிற்சிப் பள்ளியில் 20.01.2025 முதல் 15.03.2025 வரை நடைபெற்ற 8 வார கால கமாண்டோ பயிற்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை காவலர் 884 A.ஹரிகிருஷ்ணன் கலந்து கொண்டு கீழ்காணும் பிரிவுகளில் பங்கேற்று பதக்கங்கள் பெற்றார்.
அவரை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (20.3.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.
1). 50 கிலோ எடைப்பிரிவில் 6 கி.மீ. ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு தங்க பதக்கம் பெற்றுள்ளார்.
2). 50 கிலோ எடைப்பிரிவில் 10கி.மீ. ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு தங்க பதக்கம் பெற்றுள்ளார்.
3). 2.4 கி.மீ. ஓட்டம். 100 மீ ஓட்டம், ஷட்டில் ஓட்டம், புஷ் அப்ஸ், புல் அப்ஸ், சிட்டப்ஸ் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு தங்க பதக்கம் பெற்றுள்ளார்.