Uncategorizedஅரசியல்உலகம்உள்ளூர் செய்திகள்குற்றம்நாடுமுக்கிய செய்தி

பா.ஜ.க.வுடன் -அ.தி.மு.க மீண்டும் கூட்டனி – நம்பியவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி செய்யும் துரோகம்..! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் அறிக்கை வெளியீடு…!

பா.ஜ.க.வுடன் -அ.தி.மு.க மீண்டும் கூட்டனி – நம்பியவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி செய்யும் துரோகம்..! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் அறிக்கை வெளியீடு…!

காயல் பட்டிணம் :

இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :;

அ.தி.மு.க முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பா.ஜ.க வுடன் கூட்டனி வைத்த போது சட்ட மன்ற தேர்தலில் படு தோல்வியை சந்தித்தார்..தமிழக மக்களின் மன நிலை நன்கு அறிந்த ஜெயலலிதா இனிவரும் காலங்களில் ஒரு போதும் பா.ஜ.க வுடன் கூட்டனி வைத்து கொள்ள மாட்டோம் என்று தமிழக மக்களுக்கு உறுதியான வாக்குறுதியை கொடுத்தார்… ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதியை நம்பி தமிழக மக்கள் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்தனின் விலைவாக மாபெரும் வெற்றி பெற்று அன்றே தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைத்தார்…மேலும் தமிழகத்தில் ஆட்சி அமைத்தாலும் பா.ஜ.க வுடன் கூட்டனி வைக்காமல் தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறாமல் கடைசி வரையிலும் காப்பாற்றியவர் ஜெயலலிதா….

ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தனது சுய லாபத்திற்க்காக பா.ஜ.க வுடன் கூட்டனி வைத்ததின் விலைவாக சட்டமன்ற தேர்தலில் படு தோல்வியை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் 2026 சட்ட மன்ற தேர்தலை சந்திக்க பா.ஜ.க வுடன் கூட்டனி வைத்தால் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியை அமைக்க போகிறதா ஒரு போதும் இல்லை ஏனென்றால் பா.ஜ.க வுடன் கூட்டனி வைத்த கருணாநிதி மற்றும் – ஜெயலலிதா போன்ற ஆளுமையான தலைவர்களால் தமிழகத்தில் ஆட்சியை அமைக்க முடியவில்லை அப்படி இருக்க எடப்பாடி பழனிச்சாமியால் ஆட்சி அமைக்க முடியுமா வேடிக்கையாக உள்ளது…
மேலும் 2026 ல் தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க வரலாறு கானாத தோல்வியை சந்திக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை….

மேலும் அ.தி.மு.க வை நம்பி வாக்களித்த இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் செய்த துரோகம் கொஞ்சம் நஞ்சம் இல்லை… இதனை இஸ்லாமியர்கள் மறக்க மாட்டார்கள் மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சட்ட மன்ற தேர்தலில் பா.ஜ.க வால் படு தோல்வியை சந்தித்தேன் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி பா.ஜ.க வுடன் கூட்டனி வைத்தால் அ.தி.மு.க வை விட்டு விலகுவேன் என்று பேசினார்… இந்நிலையில் மீண்டும் அ.தி.மு.க – பா.ஜ.க வுடன் கூட்டனி என்று தெரிந்தவுடன் அ.தி.மு.க வை விட்டு ஜெயக்குமார் விலகியதாக தவகல் வெளியாகி உள்ளது. பேசிய வார்த்தையை காப்பாற்றியவர் ஜெயக்குமார். அதேபோல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மீண்டும் அ.தி.மு.க – பா ஜ க உடன் கூட்டனி வைத்தால் பா.ஜ.க விலிருந்து விலகுவேன் என்று பேசிய முன்னால் மாநில தலைவர் அண்ணாமலை பா.ஜ.க வை விட்டு எப்போது விலக போகிறார் என்பதை சற்று பொறுத்திருந்து பார்ப்போம் இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button