மாநகராட்சியில் ₹78.80 இலட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் துவக்கம்….!
நாகர்கோவில் மாநகராட்சியில் ₹78.80 இலட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் துவக்கம்….!
23 -வது வார்டுக்குட்பட்ட நீதிமன்றம் சாலை நீதிமன்றம் வாயில் அருகே ₹8 இலட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டுதல்.
32-வது வார்டுக்குட்பட்ட சைமன் நகர், பிள்ளையார் கோவில் தெருவில் ₹4.80 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி.
45-வது வார்டுக்குட்பட்ட தாராவிளை பகுதியில் ₹22 இலட்சம் மதிப்பீட்டில் படிப்பகம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுதல்.
42-வது வார்டுக்குட்பட்ட வேத நகர் பகுதியில் ₹22 இலட்சம் மதிப்பீட்டில் படிப்பகம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுதல்..
52-வது வார்டுக்குட்பட்ட சாஸ்தான் கோவில் விளை பகுதியில் ₹22 இலட்சம் மதிப்பீட்டில் படிப்பகம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுதல்.
ஆகிய பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் துவக்கி வைத்தார்.
உடன் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மாவட்ட நீதிபதி கார்த்திகேயன், துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, உதவி செயற்பொறியாளர் ரகுராமன், மண்டல தலைவர்கள் ஜவகர், அகஸ்டினா கோகிலவாணி,உதவி பொறியாளர்கள் ராஜா, செல்வன் ஜார்ஜ், மாமன்ற உறுப்பினர்கள் விஜிலா ஐஸ்டஸ்,சிஜி, சதீஷ், ஸ்டாலின் பிரகாஷ், ரமேஷ்,அரசு வழக்கறிஞர் லீனஸ் ராஜ், தொழில்நுட்ப அலுவலர்கள் பாஸ்கர்,ஆனந்த பத்மநாபன், திமுக மாநகர செயலாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர் லிவிங்ஸ்டன், செயற்குழு உறுப்பினர் சதாசிவன், மாநகர துணைச்செயலாளர் ராஜன்,வழக்கறிஞர் சங்க தலைவர் ஜெயகுமார், பகுதி செயலாளர் ஜீவா,அணி நிர்வாகிகள் சரவணன், குமார் சேரலாதன், சகாய டெல்வர், வட்டச் செயலாளர்கள் சுரேஷ், மைக்கேல் ராஜ், சிவகுமார், ஜெயகிருஷ்ணன், குணசேகரன், துரை உட்பட பலர் கலந்து கொண்டார்….