கும்பகோணத்தில் நான் முதல்வன் உயர்வுக்கு படி முகாம் நடைபெற்றது…
கும்பகோணத்தில் நான் முதல்வன் உயர்வுக்கு படி முகாம்
மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி, முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார் முன்னிலையில் புனித அன்னாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கும்பகோணத்தில் 14-09-24 அன்று நடைபெற்றது.முகாமில் கும்பகோணம் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் பயின்ற 2022-23, 2023-24 கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவர்களை உயர் கல்வியில் சேர்க்கும் நேரடி சேர்க்கை முகாம் நடைபெற்றது… அடிப்படை சேர்க்கை கட்டணம் செலுத்த இயலாத ஒரு சில மாணர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் முயற்சியால் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக ஜி.பாஸ்கர் சிறப்பு உதவி ஆய்வாளர், கும்பகோணம் தன்னார்வலராக முன்வந்து ₹.3600-/- மதுமிதா என்ற மாணவிக்கு அரசு மகளிர் கல்லூரியில் சேர்க்கை கட்டணம் செலுத்தி,அம் மாணவி பிஎஸ்சி புவியியல் பிரிவில் படிக்க உதவி புரிந்த அன்னாரின் செயல்பாட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார் கல்லூரி துறைத் தலைவர் டாக்டர் அனுசியா மற்றும் பேராசிரியர் பெருமக்கள் வாழ்த்தினார்கள்… சேர்க்கையின்போது நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் ராதாகிருஷ்ணன்,நான் முதல்வன் பள்ளி ஒருங்கிணைப்பாளர் கோமதி உடன் இருந்தனர்.