திருப்பத்தூர் மாவட்ட ரோட்டரி சங்கம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை, புனித சகாய அன்னை பங்கு மற்றும் திருப்பத்தூர் இந்திய செஞ்சிலுவை சங்கம் இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் மற்றும் சித்த மருத்துவ முகாம் 13-04-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 09-45 மணிக்கு புனித சகாய அன்னை ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது…..
திருப்பத்தூர் மாவட்ட ரோட்டரி சங்கம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை, புனித சகாய அன்னை பங்கு மற்றும் திருப்பத்தூர் இந்திய செஞ்சிலுவை சங்கம் இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் மற்றும் சித்த மருத்துவ முகாம் 13-04-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 09-45 மணிக்கு புனித சகாய அன்னை ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை ஏற்று சிறப்பித்தார்.புனித சகாய பங்கை சேர்ந்த ரவி அனைவரையும் வரவேற்றார்…சிறப்பு விருந்தினராக அருட்தந்தை Dr.I.கிளமெண்ட், ரோட்டரி சங்கம் வில்சன் ராஜசேகர்,செஞ்சிலுவை சங்க தலைவர் கிஷோர் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ரோட்டரி சங்கத்தை சார்ந்த திருநாவுக்கரசு, அருணகிரி,சோமு, விஜயகுமார்,K.M.சுப்பிரயணியம்,ஏலகிரி செல்வம், சத்தியசீலன்,நவீந்திரன்,ஆஞ்சி, பெருமாள்சாமி,செல்வராஜ், தண்டபாணி மற்றும் அரசு மருத்துவர் பிரபாகரன், சித்த மருத்துவர் அரசு உமேரா மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்தவர்கள் ரத்த தான கொடையாளர்கள் கலந்துகொண்டனர். இறுதியாக சோமு நன்றி கூறினார். முகாமில் 50 யுனிட் ரத்தம் கொடையாளர்களிடம் இருந்து தானமாக பெறப்பட்டது….
தலைமை செய்தியாளர்
S. ராஜீவ்காந்தி