Uncategorizedஅரசியல்உலகம்உள்ளூர் செய்திகள்குற்றம்நாடுமதம்முக்கிய செய்தி

கடலூர் மாவட்டம் : நெல்லிக்குப்பத்தை சேர்ந்த கெளசிக் மீது கொடூரமாக தாக்கிய காவல் துறையினர் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம்….!

கடலூர் மாவட்டம் : நெல்லிக்குப்பத்தை சேர்ந்த
கெளசிக் மீது கொடூரமாக தாக்கிய காவல் துறையினர் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம்….!

இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கடலூர் மாவட்டம் : நெல்லிக்குப்பத்தை சேர்ந்த கௌசிக் என்பவர் அதிகாலை 3:00 மணி அளவில் அவரது உறவினர் விட்டுக்கு சென்று ஸஹர் சாப்பாடு கொடுத்து விட்டு இரு சக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருக்கும்போது நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தைச் சேர்ந்த மூன்று காவலர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை வழி மறித்து லத்தியால் கண்மூடித்தனமாக தாக்கியதை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாக கண்டிக்கிறது.

மூன்று காவலர்கள் தாக்கியதில் கெளசிக் என்பவரின் வலது புறம் கண்ணில் பலத்த அடிபட்டு கண் புருவ பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு கண் நரம்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் அருகில் இருக்கும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்கிற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

மூன்று காவலர்கள் சேர்ந்து கன்முடிதனமாக தாக்கும் அளவுக்கு கெளசிக் என்ன குற்றம் செய்தார் ? பொது மக்களை பாதுகாக்கும் பனியில் இருக்கின்ற காவல் துறையினரே மிருகத்தனமாக நடந்து கொள்வதை ஒரு போதும் என்று கொள்ள முடியாது ? மேலும் இது போன்று ஒரு சில காவல் துறையினர் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாத செயலினால் ஒட்டு மொத்த காவல்துறை அதிகாரிகளுக்கும் கெட்ட பெயரை உண்டாக்கும் .

எனவே : கெளசிக் என்கிற இளைஞரை மிகவும் கொடூரமாக தாக்கிய மூன்று காவலர்கள் மீது எந்த வித பாரபட்சம் பார்க்காமல் வழக்கு பதிவு செய்து துறை ரீதியான நடவடிக்கை யை உடனடியாக எடுக்க வேண்டும் என தமிழக அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பாக கேட்டு கொள்கிறோம்… இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button