கோவை “பிரபஞ்ச அமைதி” ஆசிரமத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்…!
கோவை “பிரபஞ்ச அமைதி” ஆசிரமத்தில் சர்வதேச
மகளிர் தின விழா கொண்டாட்டம்…!
மார்ச் 8 2025 சனிக்கிழமை
மாலை 6 மணி அளவில்
பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில்
சர்வதேச மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஆசிரம பெண் (குழந்தைகள்),பெண் (முதியோர்கள்), மனநிலை பாதிக்கப்பட்ட பெண்கள், மன வளர்ச்சி குன்றிய பெண்கள், பெண் சேவையாளர்கள், நன்கொடையாளர்கள்
மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்ற மாறுவேடப் போட்டி, பாட்டு, நடனம், கவிதை வாசித்தல், இலவச மருத்துவ ஆலோசனை, இலவச சட்ட ஆலோசனை என மகளிர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
குருஜி ஷிவாத்மா , பெண்களை காப்பதும் போற்றுவதும் நமது கடமை என்றும் பெண்களின் பெருமை பற்றியும் வாழ்த்திப்
பேசினார். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள்,
மருத்துவர் சுனிதா ராமர், அட்வகேட் ஜெயந்தி, கருமத்தம்பட்டி காவல் நிலையம் பிரேமலதா, ஜீவ சாந்தி அறக்கட்டளை சஹானா, ஸ்டெல்லா, தோழர்களின் கரங்கள் அமைப்பைச் சார்ந்தவர்கள், மனித உரிமைகள் கழக தேவாம்பிகை மற்றும் பல்வேறு மகளிர் குழுக்களைச் சார்ந்தவர்கள் என பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
சமூகத்தில் பல்வேறு சிறப்புகளைச் செய்து தியாகச் செம்மல்களாய் விளங்கும் மகளிருக்கு குருஜி ஷிவாத்மா பொன்னாடை அணிவித்தும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியும் கௌரவித்தார். தொடர்ந்து சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மகளிர் குழுக்களை சார்ந்தவர்கள்
மாலை சிற்றுண்டி மற்றும் இரவு சிறப்பு அமுதும் அனைவருக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரம பெண் சேவையாளர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர். நன்கொடையாளர்களின் கூட்டு முயற்சியால் விழா இனிதே நடைபெற்றது.
செய்தியாளர்
R. சித்ரகலா