உள்ளூர் செய்திகள்
குமரி மாவட்ட சங்கப் புலவர்கள் குறித்த நூல் வெளியிட ஆலோசனைக் கூட்டம்…!
குமரி மாவட்ட சங்கப் புலவர்கள் குறித்த நூல் வெளியிட ஆலோசனைக் கூட்டம்…!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த சங்கப் புலவர்களுக்கு நினைவுக் கல்தூண் அமைப்பது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் மார்த்தாண்டத்தில் புலவர் த.சுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது… தொழிலதிபர் பி.கே.சிந்துகுமார்,புலவர் கு.இரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
எழுத்தாளர் சிவனி சதீஷ் அனைவரையும் வரவேற்றார், ஆலோசனை கூட்டத்தில்
சங்க புலவர்களுக்கு நினைவு தூண் அமைக்க இடம் தேர்வு செய்வது , குமரி மாவட்ட சங்கப் புலவர்கள் பற்றிய நூல் ஒன்றை வெளியிடுவது போன்ற தீர்மானங்களை பேராசிரியர் செ. சஜு வாசித்தார்.
- மு.பாஸ்கரன், நா.ரெவீந்திரன் , செ.ஜெனமோ ஜெயன், கே.ஜி.கிருஷ்ணமணி, நாகராஜன்,
டி.கே.ஷஞ்சய் ஷாலஜி போன்ற இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கு.இர. சிவப்பிரசாத் நன்றி கூறினார்…