நாகர்கோவில் மாநகராட்சி கட்டண கொள்ளையில் ஈடுபடும் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலைய வாகன காப்பகம். நடவடிக்கை எடுப்பாரா ? ஆணையாளர் ?
நாகர்கோவில் மாநகராட்சி கட்டண கொள்ளையில் ஈடுபடும் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலைய வாகன காப்பகம்.
நடவடிக்கை எடுப்பாரா ? ஆணையாளர் ?
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி மூலம் ஏலம் விடப்பட்டு வரும் இரண்டு வாகன காப்பகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த வாகன காப்பகங்களில் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு செல்கின்றனர். அவ்வாறு வாகன காப்பகத்தில் விட்டு செல்கின்ற வாகனங்களுக்கு (24 மணி நேரத்திற்க்கு ) ஒரு நாளுக்கு ரூ. 10 , மற்றும் தலைகவசத்திற்க்கு 05, என்று மாநகராட்சி மூலம் ஒப்பந்ததாரர் வாடகை வசூலிப்பதாக அறிவிப்பு பலகை வைத்து விட்டு. பொதுமக்கள் வாகனங்களை கொண்டு நிறுத்தும் போது வாகன காப்பத்தில் பணியில் இருக்கும் ஊழியர்கள் ரூ. 10, மற்றும் தலைக்கவசத்திற்க்கு ரூ.05, என்று முன்னதாக பெற்றுக் கொண்டு, துண்டு சீட்டு கொடுக்கின்றனர். ஒரு நாளுக்கு அதாவது (24 மணி நேரத்திற்க்கு ) உண்டான கட்டணம் பெற்று விட்டு, மீண்டும் அதே நாளில் வாகனங்களை எடுக்க செல்லும் போதும் அதே போன்று வாகன காப்பக ஊழியர்கள் மீண்டும் அதே போன்று கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் தினமும், தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு மீண்டும் வெளியே கொண்டு வரும் போது ஊழியர்களுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. இது குறித்து அங்கு பணியில் உள்ள ஊழியர்களிடம் கேட்டால் உரிமையாளரிடம் கேளுங்கள் என்று திமிராக கூறிவருகின்றனர். எனவே முறையான கட்டணங்களை பொதுமக்கள் அளிப்பதற்க்கு ஏதுவாக வாகன காப்பகத்தில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை வைத்து பொதுமக்களுக்கு ஏற்படும் குழப்பத்தை தீர்க்க வேண்டும் மேலும் இதுவரையிலும் அதிக கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த தாரரின் உரிமையை ரத்து செய்து மாநகராட்சி ஆணையர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனது சமூக ஆர்வலர்கள் நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.