திருப்பத்தூர் மாவட்டத்தில் போட்டா ஜியோ சார்பில் திருப்பத்தூர் எஸ்.பி.ஐ வங்கி முன்பு பத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது….
திருப்பத்தூர் மாவட்டத்தில்
போட்டா ஜியோ சார்பில் திருப்பத்தூர் எஸ்.பி.ஐ வங்கி முன்பு பத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது….
திருப்பத்தூர் மாவட்டத்தில்
அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்களின் கூட்டமைப்பு (போட்டா ஜியோ ) சார்பில் திருப்பத்தூர் எஸ்.பி.ஐ வங்கி முன்பு பத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை கே.கோபி
(மாவட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்)
தலைமையேற்று நடத்தினார்…
கே.சுந்தரகோபால் (மாவட்ட நிதி காப்பாளர் ஆசிரியர் சங்கம்)
வரவேற்புரை ஆற்றினார்…பிரபு (மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கழகம்),
என்.சதீஷ்குமார் (மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேசிய ஆசிரியர் சங்கம் )மல்லிகார்ஜுனா( மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்கம்),
செல்வகுமார்( மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்),வெங்கடேசன் (மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம்),மெய்ஞானம் (மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆதிதிராவிடர் விடுதி பணியாளர் சங்கம் )
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் ஜெயரத்தினம் காந்தி (மாநில தலைவர் தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர் பட்டதாரி முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம்) சிறப்புரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வி.ராசுக்குட்டி (மாநில அமைப்பு செயலாளர் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் அடிப்படை பணியாளர் சங்கம் )நன்றியுரை ஆற்றினார். ஆர்பாட்டத்தில் சங்கத்தில் உள்ள பல்வேறு நிலையிலான அரசு ஊழியர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்…
தலைமை செய்தியாளர்
S. ராஜீவ்காந்தி