கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை தேர்வுநிலை பேரூராட்சியில் தவணை முறையில் குடியிருப்பு குடிநீர் இணைப்பு பெறுவதற்காக விண்ணப்பிக்கும் முறை மற்றும் கட்டண விபரம் அறிவிப்பு…
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை தேர்வுநிலை பேரூராட்சியில் தவணை முறையில் குடியிருப்பு குடிநீர் இணைப்பு பெறுவதற்காக விண்ணப்பிக்கும் முறை மற்றும் கட்டண விபரம் அறிவிப்பு…
சிறுமுகை பேரூராட்சியில் தவணை முறையில் குடியிருப்பு குடிநீர் இணைப்பு பெற கீழ்க்கண்ட ஆவணங்களுடன் பொதுமக்கள் 01.04.2025 முதல் பேரூராட்சியில் விண்ணப்பிக்கலாம்…
1.குடிநீர் இணைப்பு கோரும் விண்ணப்பம்.
2.சொத்து வரி இரசீது நகல்.
3.சொத்து ஆவணம் (கிரய பத்திரம் நகல், பட்டா நகல்)
4.ரூ.100 மதிப்புள்ள முத்திரைதாள் உறுதி மொழி ஆவணம் (இரண்டு எண்ணிக்கை)
குறிப்பு: குடிநீர் இணைப்பு கோரி விண்ணப்பித்து முதல் தவணை செலுத்தி குடிநீர் இணைப்பு பெறுபவர்கள் உறுதிமொழி படிவத்தில் தெரிவித்துள்ளவாறு பிரதிமாதம் 25ம் தேதிக்குள் மீதமுள்ள தவணை தொகைகளை செலுத்தவேண்டும்.
பொதுமக்கள் இத்திட்டத்தின்மூலம் பேரூராட்சி அலுவலகத்தை தொடர்புகொண்டு தொகை செலுத்தி பயன்பெறுமாறு சிறுமுகை பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர் கேட்டுக்கொண்டனர்…
செய்தியாளர் R.ராஜேஷ்.