அரசியல்உள்ளூர் செய்திகள்குற்றம்நாடுமுக்கிய செய்தி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 ம் கட்ட தேர்தல் பரப்புரைக்குச் செல்ல இருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஹெலிகாப்டரில் காக்க வைத்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்….
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 ம் கட்ட தேர்தல் பரப்புரைக்குச் செல்ல இருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஹெலிகாப்டரில் காக்க வைத்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர். ஹெலிகாப்டர் புறப்பட அனுமதி தர தாமதித்ததால் பரபரப்பு…!
தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொள்ள ஹெலிகாப்டரில் கோடா பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல தயாராக இருந்த ராகுலை, 75 நிமிடங்கள் வரை காத்திருக்க வைத்தது ராகுலுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நேர காத்திருப்புக்குப் பின் ஹெலிகாப்டர் புறப்பட அனுமதி வழங்கப்பட்டது.
மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கே இந்த நிலையா? என இச்சம்பவம் குறித்து காங்கிரஸ் வேதனை தெரிவித்துள்ளது…!