குமரி கிழக்கு மாவட்ட திமுக மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கழக மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் தலைமையில் நடைபெற்றது….
குமரி கிழக்கு மாவட்ட திமுக மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி
நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கழக மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் தலைமையில் நடந்தது..மாவட்ட அமைப்பாளர் பிரபா ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்…
கூட்டத்தில் நவம்பர் 27ம் தேதி தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அணி சார்பில் நலத்திட்ட உதவிகள்,ஆதரவற்றவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கல் மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் குறித்தும்,மேலும் வரும் நவம்பர் 23,24 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளி மாணவ,மாணவிகள் பங்குபெறும் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி நாகர்கோயில் கோட்டார் இடலக்குடி கே.இ.எம்.எஸ் பேட்மிட்டன் கிளப்பில் நடைபெறுவது என தீர்மானிக்கப்பட்டது….கூட்டத்தில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஜென்சன் ரோச்,மாணிக்கராஜா,நகர தலைவர் முகமது உசேன்,துணை தலைவர் மால்டன்ஜினின்,அமைப்பாளர் ராம்தாஸ்,துணை அமைப்பாளர்கள் சுப்பையா பிள்ளை,சிபின்,மணிகண்டன்,ஜெஸ்டின் பாஸ்கர்,ரமேஷ் ஆகியோர்
பங்கேற்றனர்…