குமரி திமுக கிழக்கு மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்றது…
குமரி திமுக கிழக்கு மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் பாபு தலைமையில் கொட்டாரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஒன்றிய துணை செயலாளர்கள் மெனாண்டஸ் பாலசுப்பிரமணியன், எட்வின்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொட்டாரம் பேரூர் செயலாளர் வைகுண்ட பெருமாள் வரவேற்று பேசினார்… நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் ரெ.மகேஷ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்வில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தில்லை செல்வம், மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் தாமரை பாரதி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி,மாநில முன்னாள் தொண்டரணி து.அமைப்பாளர் பால.ஜனாதிபதி,மகளிரணி ஜெனஸ் மைக்கேல், இளைஞரணி பொன்.ஜாண்சன்,தமிழன் டி.ஜானி, ஜெகன், அன்பழகன், நிஜார்,கெய்சர், கான்,பிரேம் ஆனந்த் பேரூராட்சி தலைவர்கள் குமரி,ஸ்டீபன்,அன்பரசி, கார்த்திகா, அனுசியா, விமலா,மதி, சரோஜா, பாலசுப்பிரமணியன், பிரேமலதா, தங்கமலர், ஆறுமுகம் பிள்ளை, தொ.மு.ச எஸ்.சி.செல்வன்,கற்கை ஷைலா, சுசீலாதேவி, சந்திரகலா, பேருர் செயலாளர்கள் புவியூர் காமராஜ்,சிற்பி சுதே.சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் பேசிய மாவட்ட கழக செயலாளர் மேயர் மகேஷ் மகளிர்
உரிமை தொகை கிடைக்க பொறாதவர்களுக்காக அமைச்சர் உதயநிதியிடம் கோரிக்கை வைத்தேன். கிடைக்காதவர்களுக்கு மனு கொடுங்கள் என்றார்,நான் கொடுத்துள்ளேன், அதிகமாக தந்தது அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு தான்… விடுப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். திமுகவினருக்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் உள்ளது… தகுதியற்றவர்களின் பெயர் நீக்கப்படுவார்கள்.கடந்த தேர்தலில் அதிகம் வாக்கு பெற காரணமாக இருந்தது மகளிர் தான். மகளிருக்காக செய்த நல்ல திட்டங்களை மனதில் கொண்டே மகளிர் வாக்களித்தனர்.19 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று தந்தீர்கள் அதற்கான நன்றி கூட்டம் தான் இது..234 தொகுதியும் பெற நீங்கள் உழைக்க வேண்டும். அவ்வாறு எனில் மீண்டும் ஸ்டாலின் ஆட்சி அமைக்க உதவ வேண்டும் என குறிப்பிட்டு பேசினார்….