குற்றம்

திருவண்ணாமலையில் குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரியில் உள்ள குளிர்பான ஆலையில் சோதனை…

திருவண்ணாமலையில் குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே Dailee குளிர்பான ஆலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தலைமையில் ஆய்வு.

திருவண்ணாமலை சிறுமி குடித்த Dailee குளிர்பான ஆலையின் கிளை ராசிபுரத்தில் செயல்பட்டு வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதன் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்..

கிருஷ்ணகிரியில் உள்ள குளிர்பான தயாரிப்பு ஆலையில் மத்திய, மாநில உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

திருவண்ணாமலையில் குளிர்பானம் குடித்து 5 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அதிரடி ஆய்வு

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், சென்னையில் இதே நிறுவனம் தயாரித்த குளிர்பானம் குடித்து 2 குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button