கும்பகோணம் மாநகராட்சியில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி மாநகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு அதற்கான கூட்டம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் 20-3-2025 அன்று காலை 11:00 மணியளவில் நடைபெற்றது.
- கும்பகோணம் மாநகராட்சியில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி மாநகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு அதற்கான கூட்டம் மாநகராட்சி அலுவலக
வளாகத்தில்
20-3-2025 அன்று காலை 11:00 மணியளவில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கீழ்கண்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது :: குழந்தை தொழிலாளர்கள் அறவே இல்லாமல் உறுதி செய்தல்., குழந்தைகளுக்கு தீங்குகள் கொடுமைகள் நிகழாமல் பாதுகாத்தல்.,18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. பெண் மற்றும் ஆண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுத்தல். பள்ளி வளாகம் மற்றும் பிற பொது இடங்களில் குழந்தைகள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை தடுத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் மற்றும் குழந்தை பாதுகாப்பிற்கு ஊறுவிளைவிக்கும் தவறான நடைமுறைகளுக்கு எதிராக செயல்படுதல் குறித்து விவாதிக்கப்பட்டது. மேற்கண்ட குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவோர் மீது உடனடியாக புகார் அளிக்க (child help line No. 1098 )என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது..இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் மாநகராட்சி சார்பில் உதவி ஆணையர் இரா.சதீஷ்குமார் மாநகர் நல அலுவலர் மருத்துவர் தி.திவ்யா, குழந்தைகள் நல குழு உறுப்பினர் மருத்துவர் வி.உஷா நந்தினி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் பிரதிநிதி டி. அசோக், ரயில்வே காவல் நிலைய குழந்தைகள் நல காவல் அலுவலர், ரயில்வே காவல் நிலைய குழந்தைகள் நல காவல் அலுவலர், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்/ மேற்பார்வையாளர், பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவியர் கலந்து கொண்டனர். மேலும் குறைந்தது மூன்று மாதத்திற்கு ஒருமுறை
இக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது…
தலைமை செய்தியாளர்
JDPN