குற்றம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நாகம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வாலிபர் குட்காவுடன் கைது…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நாகம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே திடீர் வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த வேடசந்தூர் உசேன்ராவுத்தர் தெருவை சேர்ந்த முகமது ரபீக்கை சுற்றி வளைத்து பிடித்தனர்….
இருசக்கர வாகனத்தில் இருந்த சாக்கு முட்டையை சோதனை செய்த பொழுது அதில் 20 ஆயிரத்து 673 ரூபாய் மதிப்புள்ள குட்கா பாக்கெட் இருந்தது தெரிய வந்தது.உடனடியாக குற்றவாளியை கைது செய்து வேடசந்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்….