கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் டாக்டர்.அம்பேத்கர் பிறந்தநாள் விழா மற்றும் அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு பாராட்டு விழா மருத்துவர் வை.நெடுஞ்செழியன் தலைமையில் துணைச் செயலாளர் கோ.சக்திவேல் வரவேற்றார்….
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் டாக்டர்.அம்பேத்கர் பிறந்தநாள் விழா மற்றும் அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு பாராட்டு விழா மருத்துவர் வை.நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது… துணைச் செயலாளர் கோ.சக்திவேல் வரவேற்றார்….
வியாபாரிகள் சங்க செயலாளர் கோ.குசேலன்,ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் கபடி வா.விஜயகுமார்,தேவபாண்டலம் கார்குழலி அறக்கட்டளை நிறுவனர் இராசு.தாமோதரன் மற்றும் தமிழ் படைப்பாளர் சங்க துணை தலைவர் நா.கமலநாதன் முன்னிலையில் நடைபெற்றது… தமிழ்நாடு அரசின் அகவை முதிர்ந்த தமிழறிஞர் விருது பெற்ற வளர்மதி செல்வி,ஆ.ஆறுமுகம், ஊ.கருணாநிதி ஆகியோரை சேவைச் செம்மல் இராம.முத்துக்கருப்பன் பாராட்டி கௌரவித்தார்… விழாவில் மாணவ, மாணவியர்களின் பேச்சரங்கம் நடைபெற்றது.. நிகழ்ச்சியினை கா.வேலு துணை செயலாளர் தொகுத்து வழங்கினார்… விழா நிறைவில் சங்க செயலாளர் ஆண்டப்பன் நன்றி கூறினார்…
தலைமை செய்தியாளர்
R.S.தாமோதரன்