தஞ்சை கல்யாணசுந்தரம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் 100 நாள் வாசிப்பு நிறைவு நாள் விழா 05-04-2025 அன்று நடைபெற்றது ..
தஞ்சாவூர் :
தஞ்சை கல்யாணசுந்தரம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் 100 நாள் வாசிப்பு நிறைவு நாள் விழா 05-04-2025 அன்று நடைபெற்றது ..
பள்ளி ஆண்டு விழாவிற்கு பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினர் அருணா பாஸ்கர் தலைமையேற்று பரிசுகள் வழங்கினார். செயலர்
இரா.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர்
சீ.அம்பிகா ,24 ஆவது வார்டு கவுன்சிலர் சந்தான கிருஷ்ணன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜெனட் ஷோபா, கல்யாணசுந்தரம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் க.ரமேஷ் குமார்,மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத் தலைவர் கோபாலகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் P.R.கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களது கற்றல் திறனை ஆய்வு செயது ,பாராட்டி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி மகிழ்வித்தார்கள்…நிகழ்ச்சியினை பள்ளி நிர்வாகமும், பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களும் ஏற்பாடு செய்து இருந்தனர்.
தலைமை செய்தியாளர்
JDPN